நான் டீவிற்றேன், ஆனால் அவர்கள் தேசத்தை விற்று விட்டனர்’ என்று காங்கிரஸ் கட்சியை நரேந்திரமோடி தாக்கி பேசியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. உத்தரபிரதேசத்தில் தோமாரியாகாஞ் பகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நரேந்திரமோடி பேசியதாவது.

நாம் இந்த ஊழல் அரசாங்கத்திடமிருந்து நாட்டை காப்பதற்காக நமதுபாதையை மாற்றவேண்டும். பிரித்தாளும் கொள்கை, ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று மாற்றப்பட வேண்டும். எங்களைபோன்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைசேர்ந்த மக்களின் கடின உழைப்பின் காரணமாகவே அரண்மனைகளில் வசிக்கும் அவர்கள் வசதியாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை அவர்கள் உணரவேண்டும். என்னை தூக்கி லிடுங்கள், ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில்பிறந்தவர் என்பதற்காக எனது சகோதரர்களை அவமரியாதை செய்யாதீர்கள். நான் டீவிற்றேன் ஆனால் அவர்கள் தேசத்தை விற்று விட்டனர். இவ்வாறு மோடி கூறினார்.

Leave a Reply