மோடி போட்டியிடும் தொகுதியான வாரணாசியில், வருகிற 12ந் தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. இங்கு தற்போது தீவிரபிரசாரம் நடந்துவருகிறது.

வாரணாசி தொகுதியில் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக, தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 15பேர் கொண்ட குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று முதல் அங்கு தமிழர்கள் வாழும்பகுதியில் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்கிறார்கள்.

தமிழர்களிடம் கொடுத்து வாக்குசேகரிப்பதற்காக தமிழில் அச்சடித்த துண்டு பிரசுரங்களையும் வினியோகிக்கிறார்கள். அதில் கூறி இருப்பதாவது:–

உலகைகாக்கும் விசுவ நாதர் பூமி காசி. இனி பாரதத்தை காக்கும் மோடியின் பூமியும் காசி.

வாரணாசி வாக்காள பெருமக்களே… தருமத்தை காத்துவாழும் நீங்கள் பாரதத்தைகாத்திட மோடியின் தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

தமிழகமக்கள் சார்பில் தங்களிடமும், காசிவிசுவ நாதரிடமும் வேண்டும் ஒரேவேண்டுகோள் இதுதான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வருகிற 10–ந் தேதி மாலை 6 மணியுடன் வாரணாசியில் பிரசாரம் ஓய்கிறது

Leave a Reply