குஜராத்தில் செயல்பட்டுவரும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் உறுப்பினர்கள், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திரமோடியை ஆதரித்து வாராணசி தொகுதியில் புதன்கிழமை பிரசாரம்செய்ய உள்ளனர்.

இதுகுறித்து எம்ஆர்எம் அமைப்பின் குஜராத்மாநிலத் தலைவர் அப்துல் கனி அப்துல்லாபாய் குரேஷி, வதோதராவில் பி.டி.ஐ செய்தியாளரிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:

மத்தியில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றும்விதமாக, வாராணசி தொகுதியிலுள்ள 3.48 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகசென்று எங்கள் அமைப்பினர் வாக்குசேகரிக்க உள்ளனர். இதற்காக எங்கள் அமைப்பைச்சேர்ந்த 75 உறுப்பினர்கள் புதன் கிழமை அங்கு செல்லவுள்ளனர். அவர்கள் குஜராத்தில் கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து முதல்வராகவுள்ள மோடி தலைமையிலான ஆட்சியின்கீழ், சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெற்றுள்ளபயன்கள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்களிடம் வழங்கி, பா.ஜ.க.,வுக்கு வாக்களிக்க வலியுறுத்த உள்ளனர் என்றார்

Tags:

Leave a Reply