குஜராத்தில் இஷ்ரத்ஜஹான் உட்பட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அம்மாநில முன்னாள் அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எந்தஆதாரமும் இல்லை என்று சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2004ம் ஆண்டு மும்பையை சேர்ந்த இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் அம்மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் 4 பேரும் முதல்வர் நரேந்திரமோடியை கொல்ல வந்த தீவிரவாதிகள் .

ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என்று அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் கிளப்பிவிடப்பட்டதல் சிபிஐ. விசாரணை நடத்தியது. இருப்பினும் இந்தவழக்கில் போலி என்கவுண்ட்டர் நடத்த உத்தரவிட்டவர் என கூறப்பட்ட மாநில முன்னாள் உள்துறை இணை அமைச்சர் அமித்ஷா பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

இந்த வழக்கின் விசாரணையின் போதும், அமித்ஷாவை வழக்கில்சேர்ப்பதற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல்செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், உண்மை இப்போது வெளியாகிஇருக்கிறது. மோடி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு எதிராக சி.பி.ஐ.,யை காங்கிரஸ் எப்படியெல்லாம் பயன் படுத்தியது என்ற உண்மையும் வெளியாகிவிட்டது என்றார்.

Tags:

Leave a Reply