வாராணசியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பிரசாரப் பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி தடைவிதித்தார்.

இதைத்தொடர்ந்து, “பாரபட்சமான இந்தமுடிவை எடுத்த அதிகாரியை தேர்தல் ஆணையம் உடனடியாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி வாராணசியிலும், தில்லியிலும் வியாழக் கிழமை தர்னா நடத்தப்படும்’ என்று பாஜக அறிவித்தது. இதைத்தொடர்ந்து கங்கை நதிக்கான ஆரத்தி வழிபாட்டில் மட்டும் மோடி கலந்துகொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும். நமது சத்தியாகிரக போராட்டத்தால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது. கங்கையில் இன்று ஆரத்தி வழிபாடு நடத்த முடியாமல் போவதற்காக கங்கைமாதாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டது அம்மாவின் பாசம் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ளட்டும் என்று மோடி கூறியுள்ளார்.

Leave a Reply