வாரணாசி மக்களவைதொகுதி தேர்தல் அதிகாரியை திரும்பப்பெற வேண்டும் என்று , பாஜக வலியுறுத்தியுள்ளது.

வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி, வாரணாசி தொகுதியில் மோடியின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளுக்கு தேர்தல் அதிகாரி தொடர்ந்து தடைவிதித்து வருவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே இருமுறை கடிதம் எழுதியிருந்தும் நடவடிக்கை எடுக்காததுடன், எந்தபதிலும் அளிக்காமல் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், மோடியின் இன்றைய கூட்டத்திற்கும் தேர்தல்அதிகாரி அனுமதி அளிக்காதது கண்டனத்திற்கு உரியது என்ற அருண்ஜெட்லி, இது குறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார்.

அந்தக்கடிதத்தில், தேர்தல் அதிகாரி செய்வதை ஆணையம் ஏற்றுக்கொள்கிறதா என்றும், தேர்தல் ஆணையம் ஏன் அமைதியாக இருக்கிறது என்றும் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாரணாசிதொகுதி தேர்தல் அதிகாரியை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என்றும் கடிதத்தில் ஜெட்லி எச்சரித்துள்ளார்.

Tags:

Leave a Reply