நரேந்திர மோடி பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வாரணாசி மற்றும் டெல்லியில் பா.ஜ.க.,வினர் வியாழக்கிழமை பெருந்திரளாகக் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாரணாசியில் கங்கை நதிக் கரையில் ஆரத்திவழிபாடு நடத்திவிட்டு பினியபாக் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் ஆரத்தி வழிபாடு மற்றும் பொதுக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டதாக ஆணையத்தின் சார்பில் விளக்கம் தரப்பட்டது. இதைக்கண்டித்து வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் முன்பு பா.ஜ.க வினர் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். இதில் பாஜக மூத்த தலைவர்கள் அருண்ஜேட்லி, அமித் ஷா, அனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது அருண் ஜேட்லி நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் என்றால் அனைத்துக் கட்சியினருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வாரணாசியில் சாலையோர பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆனால் நரேந்திர மோடிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பினர்.

அமித் ஷா நிருபர்களிடம் கூறியதாவது:. மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி அரசின் உத்தரவின்படியே அதிகாரிகள் செயல்படுகிறார்கள். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த காஷ்மீரில் பிரச்சாரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் வாரணாசியில் நரேந்திர மோடி பொதுக்கூட் டத்துக்கு மட்டும் அனுமதி மறுக்கப் படுகிறது என்று தெரிவித்தார்.

Tags:

Leave a Reply