வரவிருக்கும் தேர்தல்முடிவுகள் குறித்த அதிருப்தியால்தான் காங்கிரஸ் கட்சி மோடியின் சாதி குறித்து கேள்வியை தற்போது எழுப்பியிருப்பதாக பாஜக. துணைத் தலைவர் கல்யான்சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”மக்களவை தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு தோல்வியை தரப் போகிறது என்று அவர்களுக்கே தெளிவாகபுரிகிறது. அந்த அதிருப்தியில்தான் இப்போது நாட்டு பிரச்சனைகளை விட்டு விட்டு மோடியின் சாதி குறித்து கேள்வி எழுப்புவதில் ஈடுபட்டுள்ளனர்.

1994 ஆம் ஆண்டு குஜராத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருக்கும்போதே மோடி சார்ந்துள்ள ‘மூத் வாஞ்சி’ வகுப்பு ஓ.பி.சி. பட்டியலில்தான் இருந்தது.

காங்கிரஸ் மட்டுமல்ல சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும்கூட மோடி பற்றி கேள்வியெழுப்புவதில் களம் இறங்கியுள்ளன. இந்தகட்சிகள் பணவீக்கம், வளர்ச்சி, வேலை வாய்ப்பின்மை போன்ற மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசுவதேயில்லை. மோடியின் சாதி தான் அவர்களுக்கு முக்கியமாய் போய்விட்டது” என்றார்.

Leave a Reply