நான் பிரதமர் ஆவதை தடுப்பதுதான் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் நோக்கம் என நரேந்திரமோடி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா தொகுதியில் பிந்தராகிராமத்தில் நரேந்திர மோடி இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:–

சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு டெல்லியில் ஒரேதட்டில் இருந்துதான் உணவு கிடைக்கிறது. சோனியா காந்திதான் அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். அந்த கட்சிகளின் ஒரேநோக்கம் மோடியை தடுக்கவேண்டும், நரேந்திர மோடி பிரதமர் ஆவதை தடுக்கவேண்டும் என்பதுதான்.

வறுமையை ஒழிப்பது, கரும்பு விவசாயிகளுக்கு உரியவிலை கொடுப்பது, பெண்களுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுப்பது, மின்சாரம், சுகாதார வசதிகளை செய்வது ஆகியவற்றை அவர்கள் செய்ய தவறி விட்டார்கள். அவைகளை நான் செய்யதயாராக இருக்கிறேன்.

வாயில் தங்க கரண்டியுடன் பிறந்த நபரிடம் இருந்து நான் எதையும் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. ஒருலட்சம் குழந்தைகள் நோயினால் இறந்து போய் உள்ளன. இதனை பரிசோதிக்க தாய்மகன் அரசோ, தந்தைமகன் அரசோ எதுவும் செய்யவில்லை.

1975–ம் ஆண்டு இங்கிருந்து எங்கள்கட்சியை சேர்ந்த கல் ராஜ் மிஸ்ரா என்பவர் குஜராத்தில் நடந்த தேர்தல்களுக்காக அங்குவந்தார். அப்போது அவருக்கு நான் டீவழங்கினேன். அதன் பின்னர் நான் தொடர்ந்து டீவிற்றேன். ஆனால் ஜனநாயகத்தின் வலிமையை பாருங்கள், இப்போது நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்கிறோம். இதுதான் ஜனநாயகத்தின் வலிமை. என்று நரேந்திர மோடி பேசினார்.

Tags:

Leave a Reply