மக்களவைத் தேர்தல்பிரசாரம் முடிவடைந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் ஆர்எஸ்எஸ். இயக்க தலைவர்களை பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சனிக்கிழமை சந்தித்து ஆசிபெற்றதோடு அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனையிலும் ஈடுபட்டார்.

இறுதிக் கட்டமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரசாரம் செய்து வந்த மோடி தில்லிக்கு சனிக் கிழமை வந்தார். அங்குள்ள வாஜ்பாய் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார். இதுகுறித்து கூறுகையில்,”தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்னர் அடல்ஜியை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றேன். அதேபோல் பிரசாரத்தை முடித்துவிட்டும் ஆசி பெற்றேன். அவரைசந்திப்பது எனக்கு எப்போதுமே பிடிக்கும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை அவரது இல்லத்துக்கு சென்று மோடி சந்தித்தார். பின்னர் ஆர்எஸ்எஸ். இயக்கத்தலைவர் மோகன்பாகவத் மற்றும் சுரேஷ்சோனி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை ஜண்டே வாலனில் உள்ள இயக்கத்தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் பிரசார முறைகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கலந்தாலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:

Leave a Reply