தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான பிரபுல் படேல் பாஜக.வில் இணையபோவதாக அண்மையில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதனை திட்ட வட்டமாக மறுத்திருந்தார்.

இந்நிலையில், பிரபுல்படேலுக்கு பாஜக.வில் இடம் இல்லை என்று பாஜக.வின் மூத்த தலைவர் கோபிநாத்முண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சென்றவாரம் மராத்திய நாளிதழ் ஒன்றில் பிரபுல்படேல் பாஜக.வில் சேரப்போவதாக செய்தி வெளியாகியிருந்தது. இது போன்ற வதந்திகளுக்கு பின்னால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தான் உள்ளார். படேலுக்கே இடமில்லை என்கிறபோது அவரது குருநாதர் சரத்பவாருக்கு நிச்சயமாக இங்கு இடம்கிடையாது. மத்தியில் ஆட்சியமைக்க பாஜக.வுக்கு மற்றகட்சிகளின் ஆதரவு தேவையில்லை.” என்றார்.

Leave a Reply