இந்தியாவில் புதிதாக அமைய இருக்கும் அரசுடன் நெருக்கமான உறவு அமையும், வரலாற்றின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலை நடத்தி உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது இந்தியா என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது: தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்திக் காண்பித்த இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலை நடத்தி உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது இந்தியா.

இந்தியர்களையும், அமெரிக்கர் களையும், பாதுகாப்பாகவும், வளமாகவும் வைத்திருக்க உதவும்வகையில், வருங் காலத்திலும் இந்தியாவுடன் நெருக்கமான நட்பையும், ஒருங்கிணைந்த ஒத்துழைப்பையும் தொடர அமெரிக்காவிரும்புகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்து புதிய அரசு அமைவதை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டுள்ளேன்.

இந்தியாவில் புதிதாக அமைய இருக்கும் அரசுடன் நெருக்கமான உறவுஅமையும் என்று நம்புகிறேன். என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply