அதிக வாக்குப் பதிவு என்பது பாஜக ஆதரவு, மோடி ஆதரவு, தே.ஜ..கூட்டணி ஆதரவு வாக்குகளாக மட்டுமே இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: காங்கிரஸ்சால் பிரபலமான திட்டங்களாக பிரசாரம் செய்யப்பட்ட தகவல் உரிமைச்சட்டம் மற்றும் உணவுப்பாதுகாப்பு சட்டம் ஆகியவை இந்தத்தேர்தலில் கடைசிவரை முக்கியத்துவம் பெறவில்லை.

திட்டங்கள் சிறப்பாக செயல்பட வில்லை என்றால், அது எத்தகைய பிரபலமான திட்டங்களாக இருப்பினும் உரியபலனை தராது . இந்தத் தேர்தலைப் பொருத்த வரை பிரதமர் மன்மோகன்சிங் போட்டியில் இல்லை. அவரது மூத்த அமைச்சர்கள் செய்தியாளர்களின் சந்திப்பின் போது “கோப மூட்டும், மரியாதையற்ற வார்த்தைகளை மோடிக்கு எதிராக பயன் படுத்தினர்.

இந்த 9 கட்டத்தேர்தலில், போட்டியாளர்களை சப்தமின்றி அச்சுறுத்துவதும், வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவதும் குறைந்துள்ளது. எதிர் காலத்திலும் இதுபோன்ற அபாயத்தை தேர்தல் ஆணையம் சிறந்தமுறையில் கையாளும் என்று நம்புகிறேன்.

மோடியின் ஆற்றல்மிக்க மராத்தான் பிரசாரமும், அதனால் அதிக வாக்குப் பதிவு நிகழ்ந்ததும் இந்தத்தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அதிக வாக்குப் பதிவு என்பது பாஜக ஆதரவு, மோடி ஆதரவு, தே.ஜ..கூட்டணி ஆதரவு வாக்குகளாக மட்டுமே இருக்கும் என அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply