இந்தியாவின் பிரதமராக பா.ஜ.க.,வின் நரேந்திரமோடி பொறுப்பேற்றால் சீனாவுடன் பொருளாதார ரீதியாக நல்லுறவும் அரசியல் ரீதியாக கடும் நிலையையும் மேற்கொள்வார் என்று சீனா ஏடான திகுளோபல் டைம்ஸ் கருத்து தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல்முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் நரேந்திர மோடி குறித்து சீன ஊடகங்கள் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. திகுளோபல் டைம்ஸ் ஏடு மோடி குறித்து எழுதியிருப்பதாவது:

குஜராத் மாநிலத்தில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்யவேண்டும் என்பதற்காக 4 முறை சீனாவுக்கு பயணம் செய்தவர் மோடி. 2011ஆம் ஆண்டு தி எகனாமிஸ்ட் ஊடகம், இந்தியாவின் குவாங்டங் என குஜராத்தை வர்ணித்துள்ளது . இம்மாநிலம் இந்தியாவின் மக்கள்தொகையில் 5% இருந்தாலும் ஏற்றுமதியில் 22%, தொழில் வளர்ச்சியில் 16% பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது.

சீன அரசியல் வல்லுநர் ஃபு ஜியாகியாங், மோடி பிரதமரானால் தொழில் துறை உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை கொடுப்பார். சிறப்புபொருளாதார மண்டலங்களுக்கான முதலீட்டை ஈர்ப்பார் என்கிறார். மேலும் இந்தோசீனா வர்த்தாக உறவை மோடி மேம்படுத்துவார் என்பது அவரது கருத்து. அதேநேரத்தில் மற்றொரு அரசியல் வல்லுநரான ஹூ ஜியாங்கோ, பொருளாதார ரீதியாக சீனாவுடன் இணக்கமானபோக்கை மோடி கடைபிடிக்கலாம். ஆனால் எல்லைபிரச்சனை போன்ற அரசியல் விவகாரங்களில் அவர் கடுமை காட்டக்கூடும். இந்தியாவில் வர்த்தக கொள்கைகளும் அரசியல்மயமாகி இருப்பதால் வர்த்தக உறவிலும் பாதிப்பு உருவாக வாய்ப்பிருக்கிறது என்கிறார். இவ்வாறு குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags:

Leave a Reply