கருத்து கணிப்புகள் பா.ஜ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பது உறுதி என்று தெரிவித்துள்ளதால் தேர்தல் முடிவு வெளியானதும் அதை ஆரவாரமாக கொண்டாடும் முயற்சியில் பாஜக தொண்டர்கள் இறங்கியுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சிபி டேங்க் சந்திப்பில் பொதுமக்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் 2000 கிலோ லட்டு, மற்றும் கேக் விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை பொதுமக்கள் காண வசதியாக பிரம்மாண்ட எல்சிடி திரை நிறுவப்பட்டுள்ளது.

நரேந்திரமோடி பெரும்பான்மை பெற்றதாக முடிவுகள் உறுதியானதும் உடனடியாக லட்டு விநியோகித்து பட்டாசுவெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என்று கூறினார் பாஜக மும்பை பிரிவு செய்தித் தொடர்பாளர் அடுல் ஷா.

அவர் மேலும் கூறியதாவது: லட்டுதயாரிக்க மிட்டாய் தயாரிப்பாளர்களிடம் ஆர்டர் தரப்பட்டுள்ளது. மோடியின் வெற்றிக்கு உழைத்த ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள்.

இந்தியாவில் ஏதாவது கொண்டாட்டம் என்றால் லட்டு வழங்குவதுதான் வழக்கம். இந்த லட்டுகளை ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அமைப்புகள் மூலமாக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் செய்வார்கள். எனவே லட்டுசெய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம். லட்டு வழங்குவது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

கொண்டாட்டத்தில் அவசரம் காட்டவில்லை. நாங்கள் வெற்றிபெறுவது உறுதி என எல்லோரும் நம்புகிறார்கள். எங்களுக்கும் அதில் நம்பிக்கை உண்டு என்று ஷா தெரிவித்தார்.

Tags:

Leave a Reply