பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரனாசி உள்ளிட்ட இரண்டு தொகுதிளிலுமே வெற்றிபெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் வாரனாசி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். வாரனாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மிகட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே வதோதரா மற்றும் வாரனாசியில் மோடி முன்னிலை வகித்தார். வதோதராவில் அவர் 4 லட்சத்துகும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வாரனாசியில் அரவிந்த் கெஜ்ரிவாலைவிட 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . வாரனாசியில் மண்ணின்மைந்தரான காங்கிரஸ் வேட்பாளரான அஜய்ராய் தோல்வி அடைந்துள்ளார்.

Tags:

Leave a Reply