பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நாட்டின் மாபெரும்சக்திகள் என நடிகர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்திய அளவில் ஒருபுரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய நரேந்திரமோடிக்கும், தமிழகத்தில் வரலாறுகாணாத வெற்றியை பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனது மனப் பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகளவில் மாபெரும்சக்தியாக திகழும் இந்த இருதலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றிக்காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்தவெற்றியை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்" என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply