பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் வலைபக்கத்தில் தனது வாழ்த்தை பதிவுசெய்துள்ளார். அதில், மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply