மக்களவைத் தேர்தலில் மோடி அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் மோடி மீது நம்பிக்கைவைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். மோடியின் அயராத உழைப்பு, பிரசாரத்துக்கு மக்கள் அளித்துள்ள பரிசு தான் இந்தவெற்றி. தேசிய அளவில் பாஜக கூட்டணி சுமார் 350 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி.

பா.ஜ.க.,வுக்கு வாக்களித்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி மூலம் நாடு புதியவளர்ச்சியைப் பெறும்; சாதி, மதச்சார்பற்ற நேர்மையான ஆட்சி நடைபெறும் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவாகியுள்ளது என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Leave a Reply