பாஜக கூட்டனிக்கு தமிழகத்தில் இரண்டு சீட்டுகள் கிடைத்துள்ளது. இது பல கருத்து கணிப்புகளை ஒட்டியே உள்ளது. ஆகையால் இது ஏதோ பாஜக கூட்டனிக்கு பின்னடைவு என்று சொல்வதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் பாஜக கூட்டனியின் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பாஜகவுக்கு அடிப்படையே இல்லாமல் இருந்து வந்த நிலையில் இப்போது அது கால் பதித்துள்ளது நிச்சயமாக பெரிய வெற்றியே. என்ன பலருடைய எதிர்ப்பார்ப்பு நிதர்சனத்தை விட அதிகமாக இருந்தது என்பதுதான் உண்மை.

அடுத்து கூட்டனியை பொறுத்தவரையில், கூட்டனி அமைவதற்கு தாமதமானது அதிக கால அவகாசம் இல்லாமல் செய்து விட்டது. திருச்சியில் தொடங்கிய மிகப்பெரும் மோடி அலையை அந்த தாமதம் மிகவும் பாதித்தது. அதிமுக அதற்குள் மூழு வீச்சில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது. மேலும் மோடியும், ஜெயலலிதாவும் நண்பர்கள் என்றே தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு வரை முன்நிறுத்தப் பட்டார்கள். பிரச்சாரத்தின் கடைசி தருணங்களில்தான் அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் வியூகம் வகுக்கப்பட்டது.

அடுத்து இப்பொது அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதற்கு பாஜக கூட்டனியின் பின்னடைவு காரணம் அல்ல. பாஜக உண்மையில் இப்போது சிறப்பாக வளர்ந்துள்ளது. திமுக என்கிற ஒரு பெரிய கட்சி காணாமல் போனதுதான் அதிமுக வளர்ச்சிக்கு காரணம். திமுக எதிர்ப்பு அலை பெரிதும் தமிழகத்தில் நிலவி வருவதால், திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு மேலும் பலம் சேர்த்தன. அதோடு தமிழகத்துக்கே உரிய இலவச பிச்சைகள், வாக்குக்கு பணம் அளிக்கும் கேவலங்கள் அதிமுகவுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளன.

ஆகையால் இந்த தேர்தலில் பாஜக மிகச் சிறப்பாக தமிழகத்தில் கால் ஊன்றியுள்ளது என்றே சொல்வேன். கர்நாடகத்தில் ஆரம்பத்தில் இப்படித்தான் கணக்கை தொடங்கியது பாஜக. இன்று கர்நாடக அரசில் அது மிகப்பெரும் சக்தியாக உள்ளது.
அடுத்து வரும் 2016 சட்டசபை தேர்தலுக்கு சிறப்பாக திட்டமிட்டு, கட்சியை பலப்படுத்தி, களப்பணியில் ஈடுபட்டால் பாஜக நிச்சயமாக பிரதான எதிர்கட்சியாக வர வாய்ப்புள்ளது.

Leave a Reply