நரேந்திர மோடி இன்று டெல்லியில் கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அமைச்சரவை குறித்து தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார் மோடி. நேற்று பா.ஜ.க.,வின் நாடாளுமன்ற கட்சிக்கூட்டம் முதல் முறையாக நடந்தது. இன்று முக்கிய தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் மோடி.

குஜராத்பவனில் நடந்த முதல்கூட்டத்தில் மோடியை எதியூரப்பா சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பீகார் பா.ஜ.க தலைவர் தர்மேந்திரபிரதானையும் மோடி சந்தத்தார். மேலும் அமீத் ஷாவும் ஆலோசனையில் பங்கேற்றார். குஜராத்பவன் சந்திப்புகளுக்குப் பின்னர் ராஜ்நாத்சிங் வீட்டுக்கு மோடி சென்றார். அங்கு ராஜ் நாத்துடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அத்வானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் மோடி.

Leave a Reply