மத்தியில் புதிதாக ஆட்சியமைக்க உள்ள பாஜக.,வின் செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ் தலையிடாது என்று ஆர்எஸ்எஸ்.சின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராம்மாதவ் கூறியுள்ளார்.

மேலும், ஆர்எஸ்எஸ் ஒரு அரசியல் அமைப்பல்ல என்றும் இந்திய மக்களுக்கு சேவைபுரியும் அமைப்பு என்றும் அவர் தெரிவித்தார். எனவே மக்கள் நலனில் அக்கறைகொண்டு மக்களுக்கு சிறந்தசேவை அளிக்கும் வகையில் ஆர்எஸ்எஸ். செயல்படும் என்றார். பாஜக வெற்றிபெற்றால் ஆர்.எஸ்.எஸ்சின் கைப்பாவையாக பாரதிய ஜனதா செயல்படும் என்ற பல்வேறு கட்சிகளின் குற்றச் சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேகருத்தை பா.ஜனதாவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply