மு.க.ஸ்டாலின் ராஜினாமா முடிவுகுறித்து கேள்விப்பட்டு நேற்று ஏராளமான தொலைக் காட்சி, பத்திரிகை நிருபர்களும் ஸ்டாலின் வீடு முன்பு குவிந்தனர். திமுக. தோல்விக்கு பத்திரிகைகள்தான் காரணம் என்று கூறிய அங்கிருந்த திமுக.வினர் அங்கு கூடியிருந்த பத்திரிகை யாளர்களை கண்மூடித்தனமாக

தாக்கினர். இதில் தேசிய தொலைக்காட்சி பத்திரிகை நிருபர் சபீர் அகமது மற்றும் கேமிரா மேன்கள் காயமடைந்தனர். 2 கேமிராக்களும் அடித்து உடைக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் விரட்டியடிக்கப் பட்டனர். இதனால் அப்பகுதி திடீரென்று போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக 11 பேர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக, திமுக. இளைஞர் அணி செயலாளர்கள் உட்பட 11 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கபட்டனர். பத்திரிகையாளகள் மீதான தாக்குதலுக்கு பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை தாக்க எந்தகட்சிக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply