நாட்டின் 15-வது லோக் சபா அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. புதிய எம்பி.க்கள் பட்டியலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் ஆணையம் வழங்கியது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில் 16-வது லோக் சபாவுக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்தத்

தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை கடந்த 16ந் தேதி நடந்தது. இதில் பாஜக 283 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் தேர்தல்முடிவுகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 543 புதிய எம்பி.க்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்தது. இந்நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தலைமை தேர்தல் ஆணையர் விஎஸ். சம்பத் நேற்று சந்தித்து 543 புதிய எம்பி.க்களின் பட்டியலை வழங்கினார்.

புதிய எம்.பி.க்கள் பட்டியலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் ஆணையம் வழங்கியதை தொடர்ந்து புதிய லோக் சபாவையும் அரசையும் அமைப்பதற்கான அதிகாரப் பூர்வ நடவடிக்கைகள் தொடங்கிவிடும்.

Leave a Reply