நடைபெற்று முடிந்த நாடாளுமன்றதேர்தலில் சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சரான அஜித்ஜோகி காங்கிரஸ் கட்சி சார்பில் மகாச முந்த் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க கிரிமனலாக யோசனைசெய்தார். அதன்படி பாஜக வேட்பாளரின் பெயரான சந்துலால் சாகு என்ற பெயரில் 8 பேரை போட்டியிட வைத்தார்.

இதுதவிர சந்து ராம் சாகு என்ற பெயரில் 3 பேரையும் போட்டியிடவைத்தார். இந்த 11பேரும் வேட்புமனு தாக்கல் செய்ததோடு சரி. பிரச்சாரம்கூட செய்யவில்லை. ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது இவர்கள் அனைவரும் சேர்ந்து கிட்டத் தட்ட 70 ஆயிரம் வாக்குகளை அள்ளினர். இந்த கிரிமனல்வேலை காரணமாக ஆரம்ப கட்டவாக்கு எண்ணிக்கையின் போது முன்னிலையில் இருந்த அஜித்ஜோகி, பின்னர் உண்மையான பாஜக வேட்பாளரான சந்துலால் சாகுவை விட பின்தங்கினார்.

இறுதியில் பா.ஜ.க வேட்பாளர் 503514 வாக்குகளும், அஜித் ஜோகி 502297 வாக்குகளும் பெற்றனர். 1217 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போன அஜித் ஜோகி அப்போதும் அடங்காமல் மறுவாக்கு எண்ணிக்கை வேறு கோரினார். ஆனால் தேர்தல்கமிஷன் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவித்தது. இவ்வளவு கிரிமனல்வேலை செய்த ஜோகி தொங்கிப்போன முகத்துடன் வெளியேறினார்.

Leave a Reply