பா.ஜ.க நாடாளுமன்ற குழுத்தலைவராக நரேந்திரமோடி இன்று முறைப்படி தேர்வு செய்யப் படுகிறார். லோக்சபா தேர்தலில் ஆட்சி அமைக்க பெறவேண்டிய இடங்கள் 272. இதைத்தாண்டி 282 தொகுதிகளை பாஜக கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

நாட்டில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக பா.ஜ.க திகழ்கிறது. இதைத்தொடர்ந்து நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். இதற்காக இன்று நடைபெறும் பா.ஜ.க எம்பி.க்கள் கூட்டத்தில் அவர் முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

அந்த கூட்டத்தில் மோடியை பாஜக மூத்த தலைவர் அத்வானி முன் மொழிய இருக்கிறார். அதன் பிறகு தேசிய ஜனநாயக கட்சி எம்பிக்களின் கூட்டம் நடைபெறுகிறது. அதிலும் அந்த கூட்டணியின் தலைவராகவும் நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்படுவார். அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நரேந்திர மோடி சந்திக்கிறார். அப்போது புதிய அரசு அமைக்க நரேந்திர மோடி உரிமை கோருவார். இதையடுத்து மோடியை பிரதமராக நியமிப்பது தொடர்பான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்வார். அடுத்த ஓரிரு நாட்களில் மோடி நாட்டின் பிரதமராக முறைப்படி பதவி ஏற்பார் .

Leave a Reply