தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை செயலாளருடன் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார் . பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திரமோடி ஏற்கனவே தனது அரசு முறை பணிகளை ஆரம்பித்து விட்டார்.

அதிகாரிகளிடம் திட்டங்களின் நிலை குறித்து கேட்டறிந்ததை போன்று உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமியை சந்தித்து பாதுகாப்பு நிலவரங்களை கேட்டறிந்துள்ளார். அடுத்த 100 நாட்களில் எடுக்கவேண்டிய செயல் திட்டங்களை வகுக்கும் பொறுப்பையும் அனில் கோஸ் வாமியிடம் மோடி அளித்துள்ளார்

இதில் எல்லை தாண்டிய பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதத்துக்கு பதிலடிகொடுப்பது ஆகியவற்றில் பூஜ்ய அளவுக்கு பொறுமைகாப்பது என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அம்சங்களை உள்ளடக்கி 100 நாள் செயல்திட்டம் தயாரிக்கும் பொறுப்பை உள் துறை செயலாளருக்கு மோடி அளித்துள்ளார்.

Tags:

Leave a Reply