நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தபோது அவரது அரவணைப்பில் தே.மு.தி.க தலைவர் விஜய காந்த் திக்குமுக்காடிப் போனார் . நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று பாஜக மற்றும் தே.ஜ.,கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக குழு மற்றும் தேசிய ஜனநாயகக் குழுவின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது மோடிக்கு பலரும் வரிசையில் நின்று வாழ்த்துதெரிவித்து கொண்டிருந்தனர். அப்படி விஜய காந்த்தும் நின்று கொண்டிருப்பதை பார்த்தார் மோடி. பின்னர் அவரை தமது அருகே வரவழைத்தார். விஜயகாந்தை மோடி அரவணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அப்படி மோடி அரவணைத்த போது விஜய காந்தின் கால்கள் தடுமாறி அவர் அப்படியே மோடிமீது சாய்ந்தார் . இதனைத் தொடர்ந்து மோடிக்கு பொன்னாடை அணிவித்த விஜய காந்தை கன்னத்தில் தட்டிக்கொடுத்தும் கிள்ளியும் நெகிழவைத்தார்.

Leave a Reply