நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, நாடுமுழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து 25 மாநிலங்களில் 3 லட்சம் கிமீ. தொலைவுக்கு பயணம்செய்து, 437 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப்பேசினார்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், நேற்று அவர் குஜராத் முதல்மந்திரி பதவியை விட்டுவிலகினார். அதன்பின்னர் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மோடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது ; முதல்வர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்துவிட்டேன், இனி நான் முன்னாள் முதல்வர் தான், இருப்பினும் ஒரு கோப்பைக்கூட நான் நிலுவையில் வைத்திருக்க வில்லை , தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபட்டிருந்த போதும் இரவு வேளைகளில் நான் அதிகாரிகளை அழைத்து எனது வேலையை முடித்தேன்

பொது வாழ்க்கையில் குறுக்குவழி என்ற பேச்சுக்கே இடமில்லை, என்னைப் போலவே கட்சியின் தொண்டர் ஒருவர் கடினமாக உழைத்தால் ஒரு நாள் அவரும் அதற்கான பலனை அனுபவிப்பார்.

இப்போது அமித்ஷாவின் புகைப்படத்தைப் பார்த்தாலே எதிர்கட்சியினர் அஞ்சுவார்கள். தேசத்திற்கு உழைக்க ஒருவர் முடிவெடுத்தால் ஒருவர் என்னவெல்லாம் செய்துகாட்ட முடியும் என்பதற்கு அவரே சிறந்த உதாரணம். இப்போது ஒவ்வொருமட்டத்திலும் திறமையான தலைவர்களை நான் பார்க்கிறேன். இது எனது சாதனையல்ல அவரவர் கடினமாக உழைத்ததன் விளைவு.

எனது காங்கிரஸ் நண்பர்கள் இங்கு மத்தியப் புலனாய்வுத்துறையினரை அனுப்பி தேநீர் விற்பவர்களை அவமரியாதை செய்தனர், அது தேநீர்புரட்சியாக மாறியது. அவர்கள் அனைவரும் காங்கிரஸுக்கு எதிராக திரும்பினர். இது தான் சுயமரியாதையின் சக்தி” என்று கூறினார் மோடி.

Tags:

Leave a Reply