குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் இன்று பதவி ஏற்கிறார். இதன்மூலம் குஜராத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்கு அவர் உரியவராகிறார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதன் மூலம் மத்தியில் ஆட்சி அமைக்கிறது பாஜக. அக்கட்சியின் பிரதமர்வேட்பாளரான மோடி, வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார் . இதனால் நேற்று தனது குஜராத் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் மோடி. இதன்மூலம் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால முதல்வர் பணி முடிவுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக குஜராத் மாநில பாஜக. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் காந்தி நகரில் நடைபெற்றது.

அதில் நரேந்திர மோடி, குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், மோடியின் நண்பருமான அமித் ஷா, பா.ஜ.க. பொதுச் செயலாளர் தாவர் சந்த் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் பதவிக்கு ஆனந்தி பென் படேல் பெயரை மாநில விவசாயத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா முன்மொழிய, அதனை அமித் ஷா உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனையடுத்து, 73 வயதான ஆனந்தி பென் படேல், குஜராத்தின் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று ஆனந்திபென் படேல் குஜராத்தின் முதல்வராக பதவியேற்கிறார். இதன்மூலம், குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்னும் பெருமையை அவர் பெறுகிறார்.

Leave a Reply