நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்திலிருந்து விடைபெற்றார். டெல்லி புறப்படும் முன் அவர், தனது தாயார் ஹீரா பென்னை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்.

அப்போது, மோடிக்கு இனிப் பூட்டிய அவரது தாயார், மக்களின் நலனுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடவேண்டும் என அறிவுறுத்தினார். டெல்லியில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள மோடிக்கு, தாயார் என்ற முறையில் வழிச் செலவுக்கு சிறிது பணத்தையும் வழங்கினார் ஹீராபென்.

அதனை புன்முறுவல் மாறாமல் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி, பின்னர் தனது தாயார் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதையடுத்து டெல்லி புறப்பட்ட மோடி, 6 கோடியே 25 லட்சம் குஜராத் மக்களிடம் பிரியாவிடை பெறும்விதமாக, குட்பை குஜராத் என கூறினார். ஏறத்தாழ 13 ஆண்டுகளாக குஜராத் முதலமைச்சராக இருந்த தமக்கு, ஊடகங்கள் அளித்த ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவிப்பதாகவும் நரேந்திரமோடி கூறினார். குஜராத் மாநிலத்திலிருந்து விடைபெற்று டெல்லி சென்றுள்ள நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்க இருக்கிறார்.

Leave a Reply