குஜராத் மாநில முதலமைச்சராக பதவிவகித்த நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் .

இந்நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜக.வின் முக்கிய தலைவரும், மோடியின் நம்பிக்கையை பெற்றவருமான ஆனந்திபென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான ஆதரவு கடிதம் நேற்று அம்மாநில ஆளுநரிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் பொறுப்பை ஏற்க வருமாறு ஆனந்திக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து ஆனந்திபென் படேல் முதல்வராக பொறுப்பேற்றார். அம்மாநில கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளியவிழாவில் ஆளுநர் கமலாபெனிவால் ஆனந்திக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரான அத்வானி, மோடி, முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் ஆகியோர் கலந்துகொண்டனர். அம்மாநிலத்தின் முதல்பெண் முதலமைச்சராக ஆனந்தி பென்படேல் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply