மோடி பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான பிரதமர் நவாஷ்ஷெரிப் பங்கேற்பது உறுதயாகி உள்ள நிலையில் வரும் 27ம் தேதி நரேந்திரமோடி, நவாஸ் ஷெரிப் பங்கேற்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான இரு தரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு பேச்சு

வார்த்தைக்குப்பின் ஷெரிப் பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி நாளை மறுநாள் பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்நாட்டு ராணுவத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி பங்கேற்கிறார்.

மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து நரேந்திரமோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் வரும் 26ம் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்கிறார். இதில் பங்கேற்க சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது இதுவே முதல் முறை.

ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் இரவு பகலாக நடந்து வருகிறது. 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளதால், மாளிகை வளாகத்தில் புல்வெளியில் விழா நடக்கவுள்ளது. யார், யார் எந்த இடத்தில் அமர வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்காக நாற்காலிகள் போடப்பட்டு வருகிறது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோடி பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா ஆகியோர் வருவதாக தெரிவித்துள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜப்பானுக்கு செல்வதால் அந்நாட்டு சபாநாயகர் ஷர்மின் சவுத்ரி பங்கேற்க உள்ளார்.

அதே போல், பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக பாகிஸ்தானின் ஆளும் பிஎம்எல்என் கட்சி செய்தி தொடர்பாளர் சித்திக் பரூக் தெரிவித்திருந்தார். ஆனால், நவாஸ்ஷெரீப் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், அவர் டெல்லி வருவது சந்தேகம் என செய்திகள் உலவின. நவாஸ் மகள் மர்யாம் நவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியாவுடன் சுமுக உறவை வளர்ப்பது அவசியம், நவாஸ் பங்கேற்பது அதற்கு உதவும்’ என கூறியிருந்தார். இந்நிலையில், நவாஸ் ஷெரீப் நாளை காலை டெல்லி வருகிறார் என்றும் மோடி பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்கிறார் என்றும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Leave a Reply