பாராளுமன்ற மையமண்டபத்தில் பாஜக எம்பிக்கள் மத்தியில் மோடிஜி ஆற்றிய முதல் உரை…..சரித்திர பிரசித்தி பெற்றது..எதிரிகள் நேசிக்கிறார்கள்..துரோகிகள் சிலாகிக்கிறார்கள்.."கட்சிதான் எனது தாய் " என அவர் கண்கலங்கியது….அப்பப்பா…துவக்கமே தூள்..

பாராளுமன்ற வாயிற்படியில் மோடி தலைவைத்து வணங்கியது…இது உலகை கவர்வதற்காக மோடி செய்ததா?—நேற்றைக்கும் சரி–அதற்கு முந்தைய பலதடவைகளிலும் சரி—மோடியின் பல உரைகளில் "பாராளுமன்றம் நமது கோயில்–அரசமைப்பு சட்டமே நமது கீதை"–என முழங்கி இருக்கிறார்..

அதன் வெளிப்பாடுதான் –உண்மையின் உரைகல்தாந்-மோடிஜியின் பாராளுமன்ற படிகளில் தலைவைத்து வண்ங்கிய காட்சி..

மோடியிம் துவக்க வெற்றியின் 7 படிகள் என் கண்முன்னே நிற்கிறது..

1. பாராளுமன்ற படிகளில் தலைவைத்து வணங்கியது..

2."அவர்களால் முடிந்த அளவிற்கு செய்தார்கள்" என காங்கிரஸ் ஆட்சியை குற்றஞ்சொல்லாமல் பாராட்டியது..

3. தனது பதவி ஏற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் சமுதாய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது

4.ஒவ்வொரு அமைச்சகத்தின் "ரிப்போர்ட் கார்டுகளை " சமர்ப்பிக்க சொன்னது–

5.இதுவரை இந்திய அரசியலில் இல்லாதவகையில் பிரதமரே ஒவ்வொரு துறையினரிடமும் நேரடியாக விவாதிக்க இருப்பது..

6.ராணுவ அமைச்சகத்தின் முப்படை தளபதிகளை யும் இதே மாதிரி "ரிப்போர்ட் கார்டுகளோடு " வரசொல்லி இருப்பது..

7.நாம் எல்லோரும் சேர்ந்து செயல்பட இருக்கிறோம்–இதில் ஒவ்வொரு எம்பிக்களுக்கும் பங்கிருக்கிறது"–என அனவர்களிடத்திலும் " accountability" யை புகுத்தியது..

ஆக–துவக்கமே தூள்—"நல்ல துவக்கம் பாதி முடித்தமைக்கு சமம்"–என்ற ஆங்கில பழமொழிக்கு அர்த்தம் இப்போது புரிந்திருக்கும்…

போக போக தெரியும்–இந்த பூவின் வாசம் புரியும்—-

இது அந்தகால பாட்டு—

இப்போதே புரிகிறது–நல்ல எதிர்காலம் தெரிகிறது–

இது மோடி செயலகளை –பார்த்து…..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply