ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பிரதமராக பதவியேற்பதை யொட்டி இன்று காலை ராஜ்காட் சென்ற நரேந்திரமோடி, அங்குள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்றார்.

அங்கு, மலர்தூவி மரியாதை செலுத்திய நரேந்திர மோடி சிறிதுநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். அவர் ராஜ்காட் சென்றதையொட்டி, அங்கு பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply