இன்று காலை நவாஸ்ஷெரீப் செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதிகளுக்குசென்று பார்வையிட்டார். பிறகு ஜும்மா மசூதிக்கு சென்று தொழுகைசெய்தார்.

மதியம் அவர் ஐதராபாத் பவனுக்குவந்தார். அங்கு மோடி – நவாஸ் ஷெரீப் சந்திப்பு நடந்தது.

அவர்களது பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே அமைதி, வர்த்தகமேம்பாடு இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக பாகிஸ்தான் சந்தையில் இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு எதிராக உள்ள விதி முறைகளை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

1999–ம் ஆண்டு நவாஸ்ஷெரீப், வாஜ்பாய் இருவரும் சந்தித்து பேசியபோது நல்லுறவு ஏற்பட்டது. அதன் பின்பு அதில் மாற்றம் ஏற்பட்டது. 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபிறகு கடந்த 6 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் உறவு இறுக்கமாகவே இருந்துவந்தது.

அந்த இறுக்கமான சூழ்நிலையை இன்று பிரதமர் மோடி – நவாஸ்ஷெரீப் சந்திப்பு தணித்துள்ளது. இதன் மூலம் இனி இரு நாடுகளின் வர்த்தக உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியை சந்தித்துபேசிய பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாயையும் சந்தித்துபேச நவாஸ் ஷெரீப் திட்டமிட்டுள்ளார். இது பாகிஸ்தான் – இந்தியா நட்பை மேலும் ஒருபடி உயர்த்துவதாக அமையும் என்று கருதப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே மற்றும் சார்க் தலைவர்களுடனும் மோடி இன்று சந்தித்துபேசுகிறார். இந்த சந்திப்புகள் முடிந்ததும் சார்க் நாட்டு தலைவர்கள் மோடியிடம் விடை பெற்று இன்றே தங்கள் நாடுகளுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

Leave a Reply