நரேந்திரமோடி பிரதமராக பங்கேற்ற நிகழ்ச்சியில், அவரின் குடும்பத்தை சேர்ந்த யாரும் கலந்து கொள்ள வில்லை. குஜராத்மாநிலம், காந்தி நகரில் வசிக்கும் மோடியின் தாயார் ஹிராபா, பதவியேற்பு நிகழ்ச்சியில்

பங்கேற்கலாம் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் வரவில்லை. தொலைக் காட்சியிலேயே தன் மகன் பதவியேற்பு நிகழ்ச்சியை பார்த்துமகிழ்ந்தார்.

ஆமதாபாத்தில் வசிக்கும் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத்மோடி கூறியதாவது: நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றது மகிழ்ச்சி தருகிறது . எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், இதனால் பெருமை அடைந்துள்ளனர். பதவியேற்பு விழாவுக்கு நாங்கள் சென்றிருக்கமுடியும். ஆனாலும், நாங்கள் சென்றால், மோடியின் கவனம் சிதறும் என்பதால் டில்லி செல்ல வில்லை. தொலைக் காட்சியிலேயே, மோடி பதவியேற்பு நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தோம்.

மேலும், எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மோடி சலுகைகாட்டினார் என, யாரும் அவரை கைநீட்டி பேசி விடக் கூடாது என்பதற்காகவும், குடும்பத்தினர் யாரும் பதவியேற்பு விழாவுக்கு செல்லவில்லை. இவ்வாறு, பிரகலாத் மோடி கூறினார்.

நரேந்திர மோடியின் மூத்த சகோதரர், சோமாபாய்மோடி கூறுகையில், ”எங்கள் குடும்ப உறுப்பினர்களால், மோடிக்கு எந்தத்தொந்தரவும் வரக்கூடாது என, நினைத்தோம். அவரை யாரும் குறை சொல்லக் கூடாது என்பதற்காகவே, நாங்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு டில்லி செல்லவில்லை,” என்றார்.

Tags:

Leave a Reply