மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில், பல்வேறு கட்சித்தலைவர்கள், திரைப்பட துறையினர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் திறந்த வெளி அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், குடியரசு துணைத்தலைவர் அமீத் அன்சாரி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல்கலாம், பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இவர்கள் தவிர, பாஜக மூத்த தலைவர்களான எல்கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோரும், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், உபி., முதல்வர் அகிலேஷ், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சந்திரபாபு நாயுடு, பாதல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.

Tags:

Leave a Reply