குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக பணியில் இருந்த போதும், அங்கு நரேந்திர மோடி ‘ஒரு துறவி போன்றே’ வாழ்ந்தார். சொந்த பந்தங்களை தேடிச்சென்று சந்திப்பது இல்லை. உறவினர்களும், முதல்வர் அலுவலகம் வருவது இல்லை.

அதிகாலை 5 மணிக்கே எழுந்து யோகா செய்வது, பத்திரிகைகள் படிப்பது, லேப்டாப்பில் மின்னஞ்சல் பார்ப்பது என்று தான் அவரது அதிகாலை பொழுது விடிந்தது.ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை. ஓய்வெடுக்க எங்கும் சென்றது இல்லை. கட்சி அல்லது ஆட்சி என்று தான் அவரது நாட்கள் நகர்ந்தன.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடமும், கடைநிலை ஊழியர்களிடம் ஒரே மாதிரி பழகும் குணம் கொண்டவர். டில்லிக்கு கிளம்புவதற்கு முன்பு, ‘பிரதமர் இல்லத்தில் பணி புரிய யாராவது விரும்புகிறீர்களா’ என்று தனது டிரைவர்கள், உதவியாளர்கள், சமையலாளர்களை கேட்டார் மோடி. பலரும் விருப்பம் தெரிவித்தனர். எனினும், எல்லோரையும் அழைத்து வர முடியாது என்பதால், சமையல்காரர் உட்பட சிலரை மட்டும், டில்லிக்கு அழைத்து வந்தார் மோடி.

ஒரு குடும்ப உறுப்பினரை வழி அனுப்புவது போல், முதல்வர் அலுவலக ஊழியர்கள், அமைச்சர்கள் மோடியை வழி அனுப்பினர். முதல்வர் அலுவலகத்தில் தான் பயன்படுத்தி வந்த சிவப்பு நிற பேனாவை, அங்கு முதல்வராக பொறுப்பேற்ற ஆனந்தி பென்னிடம் வழங்கி வாழ்த்தினார். பேனாவை பெற்றுக்கொண்ட ஆனந்தி பென், துக்கம் தாங்காமல் அழுதார் என்கிறார் குஜராத் அதிகாரி ஒருவர்.பதிமூன்று ஆண்டுகளில், முதல்வர் பணியில் கிடைத்த ஊதியத்தை, முதல்வர் அலுவலக கடைநிலை ஊழியர்களின் எதிர்கால படிப்புச் செலவிற்கு வழங்கி விட்டார்.

இதுவரை கிடைத்த நினைவுப்பரிசுகளை அரசு இல்லங்களுக்கு அளித்து விட்டார். கூட்டங்களில் கிடைக்கும் சால்வைகளை, அவ்வப்போது பொது இடங்களில் ‘முதல்வர் சால்வை’ என்ற பெயரில் ஏலமிட ஏற்பாடு செய்வது மோடியின் வழக்கம். அதில் கிடைக்கின்ற தொகையை அனாதை இல்லங்களுக்கு வழங்கி விடுவார்.டில்லி 7,ரேஸ்கோர்ஸ் ரோடு, பிரதமர் இல்லத்திற்கு இன்னும் சில நாட்களில் குடியேறப் போகும் பிரதமர் மோடி, ஆமதாபாத்தில் இருந்து எடுத்து வந்த ‘சொத்து’ என்ன தெரியுமா? ஒரு லேப் டாப், ஐ பேட் மற்றும் 5 செட் டிரஸ்! கூடவே விவேகானந்தர் தொடர்பான சில புத்தகங்கள்.

இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான, 120 கோடி மக்களின் அபரிதமான நம்பிக்கையை சுமந்து கொண்டு, பிரதமர் நாற்காலியில் நேற்று காலையில் அமர்ந்து பணியை துவங்கினார் மோடி! மோடி- மோடியாகவே! வித்தியாசம், அன்று முதல்வர்… இன்று பிரதமர்.இனி, தினமும் அதிகாலையிலேயே எழுந்து பணியை துவக்குங்கள் என்று சக அமைச்சர்களையும் கேட்டுக்கொண்டார்.

நன்றி ; தினமலர்

Leave a Reply