நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை திங்கள் கிழமை பொறுப்பு ஏற்றது. அன்று இரவே மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் . தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் நரேந்திரமோடி, தனது அமைச்சர்களுக்கு நான்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதில் உறவினர்கள் யாரையும் தனிச் செயலாளர்களாக நியமிக்க கூடாது. உறவினர்களுக்கு சலுகை அளிக்கக் கூடாது. உறவினர்கள் மற்றும் வாரிசுகளுக்கு ஒப்பந்தங்கள் தரக் கூடாது. பொது விவகாரங்களில், நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்று மோடி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply