முந்தைய பிரதமர்களைப் போல இல்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடி காட்டிய கடுமையை கண்டு அவர் கதிகலங்கி விட்டதாகவே தெரிகிறது .

நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற போது அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்திருந்தார். இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவருடன் நேற்று முன்தினம் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கை அரசு விரும்பாத 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களை ‘கறாராக’ பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அத்துடன், தமிழர் தாயக பிரதேசத்தில் இலங்கை ராணுவத்தினர் நில அபகரிப்பில் ஈடுபடக்கூடாது; தமிழர் தாயகப் பகுதியில் இருக்கும் ராணுவத்தினரை விரைவில் வெளியேற்றி விட்டு போலீசாரிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கவேண்டும்; போலீஸ் அதிகாரங்களை கட்டுப்பட்டுத்தும் உரிமையை மாகாண சபை யிடம் கொடுக்க வேண்டும்; இந்தியாவுக்கு உறுதியளிக்கப்பட்டபடி தமிழர் பிரச்சினைக்கு 13வது அரசியல் சாசன திருத்தம் மற்றும் அதற்கு அப்பால்சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையை தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்பதை “கறாரான” குரலில் ராஜபக்சேவிடம் பிரதமர்மோடி கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் இந்த அதிரடி பேச்சை ராஜபக்சே எதிர்பார்க்கவில்லை என்பதால் இறுக்கத்துடனேயே அவரும் பேசியிருக்கிறார். இப்பொழுதுதானே யுத்தம் முடிந்துள்ளது.. சிறிதுகாலம் எடுக்கும் என்று பதிலளித்திருக்கிறார்.

அப்போது இடைமறித்த பிரதமர் மோடி, யுத்தம்முடிந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. இனியும் தாமதிக்காமல் நடைமுறைப் படுத்துங்கள்.. இதில் உங்களுக்கு பிரச்சனை எனில் இந்தியா நேரடியாக தலையிட்டு உதவும் என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

மேலும் வெளியுறவு துறை செயலர் சுஜாதா சிங்கிடம், முன்பு இலங்கை தரப்பில் நமக்கு என்ன உறுதி மொழி தரப்பட்டது? என்று கேட்க, 13வது அரசியல்சாசன திருத்தத்துக்கும் அப்பால் சென்று அதிகாரப்பகிர்வு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது என்றாராம்.

இதை சுட்டிக்காட்டிய பிரதமர் நீங்கள் அளித்த உறுதி மொழியைத்தான் நிறைவேற்ற சொல்லுகிறோம்.. தாமதிக்க வேண்டாம் என்று சொல்ல இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் அதிர்ச்சிதான் வெளிப்பட்டதாம்..

கடந்த 30 ஆண்டுகாலம் இந்தியாவில் நிலையற்ற அரசு, உறுதியான வெளியுறவுக்கொள்கை எதுவும் இல்லாத நிலையில் இலங்கை தன் இஷ்டத்துக்கு செயல்பட்டுவந்தது; இந்தியாவை மதிப்பதாக இல்லாமல் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் மோடியின் இந்த கறார் பேச்சு வார்த்தையில் பொறி கலங்கினாராம் மகிந்த ராஜபக்சே.

Leave a Reply