பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீன பிரதமர் லீ கியாங் தொலைபேசியில் வாழ்த்துதெரிவித்தார். இருவரும் 25 நிமிடங்கள் பேசினார்கள்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழாவில் சார்க்நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். சீன பிரதமர் லீ கியாங் ஏற்கனவே தேர்தலில் வெற்றிபெற்றதும் இந்திய தூதரகம் மூலமாக நரேந்திர மோடிக்கு வாழ்த்து அனுப்பினார்.

நேற்று சீன பிரதமர் லீ கியாங் தொலைபேசியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்வெற்றி பெற்றமைக்காக மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வளர்ப்பதற்காக இந்தியாவின் புதியஅரசுடன் ஆரோக்கியமான நட்புடன் இருக்க சீன அரசு விரும்புவதாக சீனபிரதமர் லீ கூறினார்.

பதிலுக்கு மோடியும், இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் சீனாவுக்கு எப்போதுமே முன்னுரிமை வழங்கப்படும் என்றார். முன்னதாக சீன பிரதமர், இந்தியதூதர் மூலமாக தனக்கு வாழ்த்து அனுப்பியதற்காக நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள மிகப் பெரிய பொருளாதார ஒப்பந்தங்களையும் நரேந்திர மோடி வரவேற்றார். உடனுக்குடன் உயர்மட்ட தகவல் பரிமாற்றங்களை தொடர்ந்து கடைபிடிக்கவும் இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்த வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு வரும்படி சீன அதிபர் ஜிங்பிங்குக்கு, பிரதமர் நரேந்திரமோடி அந்நாட்டு பிரதமர் லீ மூலமாக அழைப்பு விடுத்தார்.

Leave a Reply