வாழும் நபர்களின் வாழ்க்கையை பள்ளிகளில் பாடமாக வைக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் பாடமாகவைக்க ம.,பிரதேசம் மற்றும் குஜராத் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து டிவிட்டர் இணையத் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி, வாழும் தனிநபர்களின் வாழ்க்கையை குறித்து பள்ளிகளில் பாடத்திட்டம் வைக்க கூடாது என்பதே தமது நிலைப்பாடு என கூறியுள்ளார். ஏராளமான சிறந்த தலைவர்கள் இந்தியாவின் வளர்சிக்காக பாடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள மோடி அவர்களது வாழ்க்கை வரலாற்றை இளம் தலை முறையினர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply