அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்கும் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது: பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ள 100 நாள் செயல்திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த உத்தரவிட்டிருப்பதாக கூறினார். அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் கடிதம் எழுதவிருப்பதாக ஹர்ஷ வர்த்தன் குறிப்பிட்டார். உயர்மருத்துவ சிகிச்சை பெற குடிமக்கள் டெல்லிக்கு வரும் நிலை கூடாது என்றும், ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் அருகிலேயே தரமானசிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply