பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இடையேயான சந்திப்பின் போது, மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து அ.தி.மு.க ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினரை பாஜக தேர்வுசெய்யுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது ; அவர்களுக்கு இடையே நல்லநட்பு நீடிக்கிறது. மாநில முதலமைச்சர்கள், பிரதமரை சந்திப்பதும், மாநில பிரச்னைகளை விவாதிப்பதும் சகஜமான ஒன்று தான். கூட்டணியில் இல்லா விட்டாலும், அதிமுக.வை தோழமை கட்சியாகவே பாஜக பார்க்கிறது.

குறிப்பாக, கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசாக இருந்தாலும், நாங்கள் அரசியல் கட்சிகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டப் போவதில்லை. மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவதையே மத்திய அரசு விரும்புகிறது. இந்த அடிப்படையில் தான், நரேந்திர மோடி – ஜெயலலிதா இடையேயான சந்திப்பை பார்க்கவேண்டும் என்றார்.

Leave a Reply