நான் அரசியலில் இன்னும் துடிப்புடன் தான் இருந்து வருகிறேன். என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு மாநில ஆளுநர் பதவி வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின .

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; "என்னை தொடர்புகொள்ளும் சிலர், கட்சித் தலைமை என்னை ஆளுநராக நியமிக்கப்போகிறதா என்று கேட்கின்றனர். உண்மையில் ஆளுநர்பதவி என்பது அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படுவது. நான் அரசியலில் இன்னும் துடிப்புடன் தான் இருந்து வருகிறேன். இன்றும் தீவிரமாக கட்சிப்பணியாற்றி வருகிறேன். எனக்கு ஆளுநர் பதவி வழங்குவதற்கான முயற்சி எதுவும் நடக்கவில்லை. அப்படியே என்னை அங்கீகரிப்பதாக இருந்தால் தேசியளவிலான பொறுப்பு வழங்கப்படுமே தவிர, இதுபோன்ற முயற்சி எதுவும் நடக்காது" என்றார்.

Leave a Reply