பாஜக மாவட்ட வணிகர் பிரிவு தலைவர் கும்பகோணம் மேல காவிரி ஜாமியா நகரை சேர்ந்த முகமது பஷீர் . அவர்களின் வாகனம் மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டுள்ளது. .

இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே வீட்டில் இருந்த முகமது பஷீர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து கும்பகோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாசில்தார் பிச்சை பிள்ளை, மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் சண்முகம், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் விரைந்துவந்து பார்வையிட்டனர். மேலும் பாஜக நிர்வாகிகளும் குவிந்ததால் பரபரப்பு உருவானது.

காரின் அருகே பெட்ரோல் கேன் கிடந்தது. எனவே காரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து முகமது பஷீர் அவர்கள் கூறியதாவது; நான் கடந்த பல வருடங்களாக பாஜக.,வில் இணைந்து பணியாற்றி வருகிறேன். எனக்கு தெரிந்து நான் அங்கே எந்த மதவாதத்தையும் காணவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சில இஸ்லாமிய அமைப்புகள் என்னை தொடர்புகொண்டு பாஜக.,வில் தொடர்ந்து இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக கூட என் காரை கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வலியுருத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply