அனைத்து துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தனது அரசு நிர்வாகத்தின் முன்னுரிமைகள் மற்றும் துறைச்செயலர்களிடமிருந்து தனது எதிர்பார்ப்பு

குறித்து மோடி விளக்கினார்.அமைச்சர்கள் இல்லாமல் துறைசெயலர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறை. அடுத்த 100 நாள்களுக்கான செயல்திட்டங்கள் குறித்த அறிக்கை தரும்படி, தனது அமைச்சர்களிடம் கேட்ட மோடி, நேற்றைய கூட்டத்தில் தனது அரசின் திட்ட முன்னுரிமைகள் குறித்து துறை செயலர்களுடன் விவாதித்தார். மொத்தம் 77 அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒன்றுக் கொன்று தொடர்புடைய துறைகள் இணைக்கப்பட்டன. அதன்படி, அனைத்து துறைகளும் 16 குழுக்களாக பிரிக்கப்பட்டன. கடந்த ஆட்சியில் ஒவ்வொரு துறையின் வெற்றி, தோல்வி குறித்தும், அடுத்த 5 ஆண்டுக்கான செயல்திட்டம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு செயலர்களிடம் கூறப்பட்டிருந்தது.அதன்படி, அவர்கள் தங்களுடைய அறிக்கையை பின்னர் தாக்கல்செய்வர். நேற்றைய கூட்டம், பிரதமர் செயலர்களுக்கு இடையேயான கலந்துரையாடலாகவே நடந்ததாக அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply