மோகன் பகவத்தின் பாதுகாப்புபணியில் சென்ற கார் தான் விபத்துக்குள்ளானது என்றும், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். விளக்கம் தந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் நேற்று மதியம் டெல்லி பரேட் சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது பாதுகாப்பு பணிக்காக உடன்சென்ற கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துள்ளானது.

இதில், மோகன் பகவத்துக்கு எந்தகாயமும் ஏற்படவில்லை என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன்பகவத் நலமுடன் இருப்பதாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராம் மாதவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் மோகன் பகவத்தின் பாதுகாப்பில் சென்று கொண்டிருந்த கார் மீதுதான் ஹரியாணா அரசு பதிவு எண் கொண்டகார் மோதியது.

மோகன் பகவத் பயணம்செய்த கார் மீது மோதவில்லை. இதனால், மோகன் பகவத் நலமுடன் உள்ளார். அவரது பயணத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply