அமெரிக்கா வருமாறு அந்நாட்டு அதிபர் ஒபாமாவிடுத்த அழைப்பை, பிரதமர் நரேந்திரமோடி ஏற்றுக் கொண்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா., சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா செல்லும்போது, அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒபாமா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் சந்திப்பு தேதிகளை இறுதி செய்வதற்காக, அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ஜெய் சங்கர், வரும் 8ம் தேதி இந்தியா வருகிறார்.

செப்டம்பர் 26ம் தேதி, ஐநா சபையில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி நியூயார்க்செல்கிறார். அப்போது, அதிபர் ஒபாமாவை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுவார் என உள் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply